அமெரிக்காவுடன் வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரி வீதத்தை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது பூகோள நெருக்கடி என்பதை எதிர்க்கட்சியினர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றுறு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர்,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி உலக நாடுகளுக்கு செல்வாக்கு செலுத்தும் வகையில் புதிய பரஸ்பர தீர்வை வரியை விதித்தார். இலங்கைக்கு 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி தொடர்பில் ஆராய்வதற்கு அன்றைய தினமே ஜனாதிபதி விசேட குழுவை நியமித்தார்.

புதிய பரஸ்பர வரி தொடர்பில் அமெரிக்காவின் பிரதிநிதிகளுடன் முதல் கட்டமாக நிகழ்நிலை முறைமை ஊடாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதிநிதிகள் இரண்டு முறை அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் வர்த்தகத்துறை பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் 3 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்ற நிலையில் இறக்குமதிகள் 300 மில்லியன் டொலர்களாக காணப்படுகிறன.
இவ்வாறான நிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பற்றாக்குறை 88 சதவீதமாக காணப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 44 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டது.
44 சதவீத தீர்வை வரி பற்றி அமெரிக்காவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு அமைவாக இரண்டாம் கட்டமாக இலங்கைக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய வலய நாடுகளில் இலங்கைக்கு அதிகளவிலான வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடப்படாவிடின் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 30 சதவீத தீர்வை வரி அமுல்படுத்தப்படும்.
ஆகவே 30 சதவீத தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வதற்கு அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
தொலைபேசி மற்றும் விருந்துபசாரத்தின் ஊடாக வரியை குறைக்குமாறு அமெரிக்காவுக்கு எம்மால் குறிப்பிட முடியாது,
ஆகவே தற்போதைய பூகோள நிலைமை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்றார்.